சர்வதேச பிடிக்குள் சிக்கப் போகும் கோட்டபாய, பிள்ளையான்
08 Sep,2023
இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ராஜபக்ஷகளின் கொலை முகத்தை வெளிக்காட்டு வகையில் பிரித்தானிய ஊடகமான சனல்-4 நீண்ட ஆவண படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது இலங்கையில் அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
விரைவில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல்வாதிகள் மத்தியில் குறித்த ஆவணப்படம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சர்வதேச மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக கோட்டபாய மற்றும் பிள்ளையான் செயற்பட்டதமாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
எனினும் இந்த காணொளி குறித்து இருவரும் அகிம்சைகளின் மறுஉருவங்களாக தங்களை வெளிப்படுத்தியுள்ளதுடன் இவ்வாறான இரத்தகறை படிந்த பாவச்செயல்களை செய்யவில்லை என்று வாதிடுகின்றனர்.
கிழங்கிலங்கையில் மாபியா கும்பலின் தலைவனாக செயற்படும் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ராஜபக்ஷர்களின் விசுவாசியாக செயற்பட்டு வருகிறார்.
பல்வேறு கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கற்பழிப்பு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பிள்ளையான், சமகால அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வருகிறார்.
இவ்வாறான நிலையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான மூளையாக செயற்பட்ட பிள்ளையானை கைது செய்யுமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
எனினும் இது குறித்து அரசாங்கம் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை. பிள்ளையானை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுமில்லை.
இவ்வாறான நிலையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் முறைப்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிலை ஏற்படுமாயின் ராஜபக்ஷ கும்பல் மற்றும் பிள்ளையானுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் நெதர்லாந்தை சேர்ந்த பிரபல கோடிஸ்வரரின் பிள்ளைகள் உட்பட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.