விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்தை விரும்பாத தமிழ் கட்சி! .!
24 Aug,2023
.
பிரித்தானியாவில் புலிகள் அமைப்பின் மீதான தடை காரணமாக புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகள் பல சவால்களைச் சந்தித்துவருவது யாவரும் அறிந்ததே.
அதனால் புலிகள் மீதான தடையை நீக்கும் நடவடிக்கையில் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒன்றுபட்டு செயலாற்றிவருகின்றன.
அதேவேளை, இலங்கையில் செயற்பட்டுவரும் தமிழ் அரசியல்கட்சிகளிடம் தடைநீக்கத்திற்கான அங்கீகாரம் கோரப்பட்டபோது, ஒரு அரசியற்கட்சியைத் தவிர மற்றைய கட்சிகள் அத்தனையுமே அதற்கான ஆதரவை வெளிக்காண்பித்ததாகத் தெரியவருகின்றது.
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட குறிப்பிட்ட அந்தத் தமிழ் கட்சி மாத்திரம் மறுத்துவிட்டுள்ளது.
இத்தனைக்கும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவென்று ஆயுதப் போராட்டம் நடாத்தி பின்னர் ஜனநாயக வழிக்குத் திருப்பிய ஒரு அமைப்புத்தான் அந்த அரசியட்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமல்ல, விடுதலைப்புலிகள் மும்முரமாக ஆயுதப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு அரசியல் செய்த ஒரு கட்சிதான் அந்தக் கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
காலம் பலரது முகமூடிகளைக் கிழித்துவருகின்றது என்பது மாத்திரம் தெரிகின்றது