இலங்கையின் ஆதிகுடி தமிழ் வேடுவர்களின் தற்போதைய நிலை என்ன?
07 Aug,2023
வேடுவர்கள் இலங்கையின் ஆதிகுடிகளாக அறியப்படுகின்றனர். இவர்கள் வேடுவ மொழியும் சிங்கள மொழியும் பேசும் மக்கள் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.
ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்க்கின்றனர். தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, வழிபாடு போன்றவற்றினை பெரும்பாலும் இழந்து வாழும் இந்த மக்களிடம், வேடுவர்களுக்குரிய அடையாளங்கள் கொஞ்சமே எஞ்சியிருக்கின்றன.
வேடுவர்கள் ஆதியில் காடுகளில் வாழ்ந்து, வேட்டையாடுதல், தேனடுத்தல் போன்றவற்றைச் செய்து வந்தனர். ஆனால், இப்போது சாதாரண வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இப்போது வேட்டையாடுவதிலிருந்து விலகியிருந்தாலும் தேன் எடுக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
சிங்களவர்களை அண்மித்து வாழும் வேடுவர்கள் சிங்களவர்களாகவும், தமிழர்களின் பிரதேசங்களுக்கு அருகாமையில் உள்ளோர் தமிழர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் வேடுவர்கள் தமிழர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
ஆனால் தமிழ் சமூகம் தங்களை 'தமிழர்களாக' ஏற்றுக்கொள்வதில்லை என்கின்றனர் இவர்கள்.
இவர்களது தற்போதைய நிலை என்ன?