யாழில் இருந்து சென்ற பெண் உட்பட இருவர் சென்னை விமான நிலையத்தில் மரணம்
30 Jul,2023
.
சென்னை விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று காலை யாழில் இருந்து தமிழகத்திற்கு சென்றிருந்த பெண் நாடு திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
43 வயதான சிவசுகந்தி என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையை சேர்ந்த 48 வயதான ஜெயக்குமார் என்பவர் மயக்கமடைந்த நிலையில் விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு, சுங்கச்சோதனை பிரிவுக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தமை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் விமான நிலைய போலிசார் உதவியுடன் அரச மருத்துமனைக்கு நோயாளர் காவு வண்டி எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சென்னை விமான நிலைய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்