. ஆரம்பித்த மாபெரும் கவனயீப்பு பேரணி - அலையெனத் திரண்ட மக்கள்
28 Jul,2023
.
திட்டமிட்டபடி மாபெரும் கவனயீப்பு பேரணி முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கண்டக ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
,
இன்று (28) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட பகுதியில் ஆரம்பித்த கவனயீப்பு பேரணியானது, முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளது.
அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இப் போராட்டத்திற்காக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இருந்து அலை அலையாக மக்கள் வந்துகொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.