இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை! சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி .
26 Jul,2023
இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம்.கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற வெலிக்கடை சிறச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை உட்பட்ட 53 தலைவர்களது 40 வது நினைவேந்தல் நினைவில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறை படுகொலை
.
அவர் மேலும் தெரிவித்ததாவது,“1983 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 25 மற்றும் 27 ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஜெகன் உட்பட எங்களுடைய 53 தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்த போராட்டத்திலே படுகொலை செய்யப்பட்ட அத்தனை தலைவர்களுக்கும், அதே போன்று 500 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட அனைத்து இயக்கங்களின் மாவீரர்கள் வீர மறவர்களுக்கும், இதுவரை போராட்டத்தால் இலங்கை அரசாகத்தாலும், சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கும், ஜீலை படுகொலையில் படுகொலை செய்யப்பட்ட மூவாயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் உள்ளடங்களாக கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும், நாங்கள் செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி வீர வணக்கம் எங்களுடைய தமிழர் தாயகத்திலே எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு தீர்வை வென்றெடுப்பதாகும்.
.
அதேபோன்று சுதந்திரத்திறக்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தி அதுதான் சுய நிர்ணய உரிமை. அதை விட சுய நிர்ணய உரிமை என்று சொல்லிக்கொண்டு நாங்களாகவே சமத்துவம் என்று சொல்வதிலே அர்த்தம் இல்லை.
சுதந்திர தமிழீழமா? இல்லையா என்ற ஒரு தீர்வை அல்லது இலங்கை அரசாங்கம. வைக்கின்ற மாகாண சபையா என்கின்ற ஒரு சர்வதேச சமூகத்தை பார்த்து கேட்கின்றோம்.
நீங்கள் இந்த வாக்கெடுப்பை இந்தியா அமெரிக்கா உட்பட்ட சர்வேச சமூகம் ஐக்கிய நாடுகளுடைய கண்காணிப்பிலே சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் கூட வாக்களிக்கக் கூடிய பொதுசன வாக்கெடுப்பு இடம்பெற வேண்டும், அதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம். அதை விடுத்து இலங்கைக்குள்ளே எந்த தீர்வும் இல்லை.”என கூறியுள்ளார்.