கச்சிதமாக காய் நகர்த்தும் ரணில்- இழிச்ச வாயர்களாக தமிழர்கள்
23 Jul,2023
.
தமிழருக்கான இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கச்சிதமாக காய் நகர்த்துக்கின்றார்.
இந்தியா செல்வதற்கு முன்னர் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்த அவர் 13 ஆவது திருத்தத்தில் எல்லாவற்றையும் தருவோம் ஆனால் காவல்துறை அதிகாரங்களை கேட்கக்கூடாது என கறாராக சொல்லிவிட்டார்.
இந்தியா செல்வதற்கு முன்னர் அவர் தமிழ் கட்சிகளை அழைத்ததே இந்தியாவில் தனக்கு ஏற்படும் நெருக்கடியை தணிக்க என்பது ஏன் எமது தமிழ் தலைமைகளுக்கு விளங்கவில்லையோ தெரியாது.
இந்தியாவில் பிரதமர் மோடி தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள் என்று கூறினால் இங்கு (இந்தியாவிற்கு) வருவதற்கு முன்னர்தான் தமிழ் கட்சிகளுடன் தீர்வு விடயத்தில் பேசிவிட்டு வருகின்றேன்.இங்கிருந்து சென்ற பின்னரும் அவர்களுடன் பேசுவேன் என தெரிவிப்பதற்காகவே அவர் தமிழ் கட்சிகளை சந்தித்துள்ளார்.
அதுபோக தற்போது 13 ஆம் திருத்த சட்டத்தில் காவல்துறை அதிகாரம் தரமாட்டேன் அது நான் தனித்து எடுக்கக்கூடிய முடிவல்ல என தெரிவித்தது இனி அதுபற்றியே எல்லோரும் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.ஆகவே இதைப்பற்றி கதைத்தால் தமிழருக்கான தீர்வை உடனடியாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது அவரது அரசியல் சாணக்கியமான செயற்பாடு.
அத்துடன் அடுத்தவருடம் அதிபர் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ளார் ரணில்.அதில் அவர் போட்டியிடவும் தீர்மானித்துள்ளார்.எனவே இந்த நேரத்தில் சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு தமிழருக்கான தீர்வை வழங்கும் றிஸ்க்கான காரியத்தில் அவர் இறங்கமாட்டார்.
அவரது மாமன் முன்னாள் அதிபர் ஜே.ஆர் ஜெயவர்தனவை அரசியலில் கிழட்டு நரி என்று கூறுவார்கள்.அதேபோன்று ரணிலையும் தந்திர நரி என்பார்கள்.அதைத்தான் அவர் தற்போது செய்து வருகிறார்.
இதில் தமிழருக்கான தீர்வு என்பது வெறும் கானல் நீர்தான். தமிழர் பிரதிநிதிகளும் ஏன் தமிழ் மக்களும் இழிச்ச வாயர்கள்தான்