தலைவர் பிரபாகரனுக்கு வழங்கிய வாக்குறுதியை இந்தியா நிறைவேற்ற வேண்டும் -
21 Jul,2023
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி , தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரிடம் தமிழர்களுக்கு சுயாட்சியை பெற்றுத் தருவோம் என வழங்கிய வாக்குறுதியை , இந்தியா நிறைவேற்ற வேண்டும் என , தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே , நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போது , தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் .
தீர்வை எட்டுவதற்கான அழுத்ததை கொடுக்க வேண்டும்
இந்தியப்பிரதமர் , இலங்கையிலே தமிழ் தேசம் , இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கான அழுத்ததை கொடுக்க வேண்டும் எனவும் ,
இலங்கை இந்திய ஒப்பந்ததின் பிரகாரம் தமிழர்களுடைய அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கவேண்டும் , அது வழங்கப்படவில்லை , ஜே. ஆர் . ஜெயவர்த்தனா ஒருதலைப்பட்சமாக ஒற்றையாட்சிக்குள் 13 வது திருத்தத்தை தமிழ் மக்கள் மீது திணித்திருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
தமிழர்கள் ஒன்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
அத்துடன் தமிழர்கள் ஒன்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் , தமிழ் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு சமஸ்டி தீர்வு எட்டப்படவேண்டும். அந்த தீர்வை எட்டுவதற்கு இந்தியா முழுமையாக தலையிட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்துயுள்ளார் .