சங்கிலியன் விட்டுச்சென்ற இந்து அரசையே கோருகின்றோம் - மறவன்புலவு சச்சிதானந்தம்
21 Jul,2023
சிறிலங்காவை பொறுத்தவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதி தற்போது ஆக்கிரமிப்பின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது .
இந்த நிலையில் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருக்கின்றது என்ற பரவலான கருத்து முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் , தமிழர்கள் மீதான ஆக்கிரப்பு என்பது எமது நிலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களாலும் இடம்பெற்றிருக்கிறது என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.
இந்து அரசை மீட்டெடுக்கவேண்டிய தேவையை சங்கிலியன் விட்டுச்சென்றதாகவும் , ஆங்கிலேயரிடம் சுதேசிகளான தமிழர்கள் அடிமையானபோது தமிழர்கள் இந்துக்களாகவே இருந்தாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
லத்தின் பெயர்களும் அரபுப்பெயர்களும் இருக்கும்போது எப்படி தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட முடியும் என கேள்வி எழுப்பிய அவர், மொழியே அங்கு பிரதானமான கட்டமைப்பை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார் .
அம்மன் ஆலய வளாகத்தில் ரஜமகா விகாரை
அதேவேளை, மன்னார் - முருங்கன் கட்டுக்கரைக்குளத்தில் மதவாச்சி மன்னார் வீதிக்கு (ஏ - 14) எதிர்ப்பக்கமாக அமைந்த அம்மன் ஆலய வளாகத்தில் ரஜமகா விகாரை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.