கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசு முனைகிறது - சுகாஸ் குற்றச்சாட்டு
01 Jul,2023
கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசு முனைகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க. சுகாஸ் தெரிவித்தார்.
அத்தோடு, நீதிமன்றங்களால் வழங்கப்படுகின்ற தீர்ப்பை மீறி செயற்படும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எந்த வழக்கும் தொடுக்கப்பட்டு பிரயோசனமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அக்கராயன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எட்டாம் கட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்துடன் கூடிய மதுபான சாலையை வேறு இடத்தில் மாற்றி அமைக்குமாறு கோரி கிராம மட்ட அமைப்புகளுடன் இணைந்து கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுகாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
நீதி கிடைக்காது
இலங்கையை பொறுத்தவரையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் நீதி கிடைக்காது என அவர் தெரிவித்தார்.