தமிழர் தாயகத்தில் சத்தமின்றி முளைத்த புதிய விகாரை - படையெடுக்கும் பௌத்த பிக்குகள்
01 Jul,2023
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை எனும் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வெடி வைத்தகல் - கச்சல் சமளங்குளம் என்ற பகுதியில் இப்புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ் விகாரையின் சுற்றுப்புறம் காட்டுப்பகுதியாக காணப்பட்ட நிலையில், இந்த விகாரையின் நிர்மாணிப்பு பணிகள் யாரும் அறியாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விகாரையில், வரும் (நாளை மறுதினம் - 03) பூரணை தினத்தில் வழிபாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குருந்தூர் விகாரை பிக்கு கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் இராணுவத்தால் இந்த விகாரை கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுராதபுரத்தில் உள்ள ருவென்வெலிசாய விகாரையில் இருந்து சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரையானது இன்று (01) வவுனியாவை வந்தடையவுள்ளது.
இந்நிலையில் பௌத்த பிக்குகளால், புதிய சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரையில் நாளை மறுதினம் விசேட வழிபாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.