10 வினாடிகளில் 1700 உயிர்கள் பலி.. உலகையே அதிர வைத்த ரயில் விபத்து!
06 Jun,2023
உலகின் மிகப்பெரும் ரயில் விபத்து.உலகின் மிகப்பெரும் ரயில் விபத்து.
இலங்கையின் தெல்வாட்டா கடற்கரை பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 9.30 மணிக்கு பெராலியா என்ற கிராமத்தை ரயில் அடைந்தது
ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்துபோலவே உலக வரலாற்றில், மிக அதிக எண்ணிக்கையில் உயிர்களை பலிகொண்ட விபத்து இலங்கையில் கடந்த 2004 இல் நடந்தது. அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து, கல்லேவை நோக்கி 2006 டிசம்பர் 26 ஆம் தேதி சமுத்ரா தேவி என்ற ரயில் புறப்பட்டுச் சென்றது. காலை 6.30 க்கு கிளம்பிய இந்த ரயிலில் சுமார் 1500 பயணிகள் இருந்தனர். இவர்களை தவிர்த்து டிக்கெட் எடுக்காத பயணிகளும் அதிக எண்ணிக்கையில் பயணித்தனர்.
இலங்கையின் தெல்வாட்டா கடற்கரை பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 9.30 மணிக்கு பெராலியா என்ற கிராமத்தை ரயில் அடைந்தது. அந்த நேரத்தில் நிலநடுக்கவும் சுனாமியும் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட அதிர்வுகள் லேசாக அமைய, அடுத்தடுத்து வந்த அதிர்வுகள் மிகப்பெரும் சுனாமி அலையை உருவாக்கின. இதில் சமுத்ரா தேவி ரயில் கடலுக்குள் மூழ்கியது. இதிலிருந்து வெளியே வர பயணிகள் எவ்வளவோ முயற்சித்தனர். இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் அடுத்த 10 நிமிடங்களுக்குள்ளாக மற்றொரு மிகப்பெரிய சுனாமி அலை தாக்கியது.
இதில் 1700 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டது இருப்பினும் உண்மையிலேயே 2,900 சடலங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. அத்துடன் சிலர் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்கள். அந்த ரயிலில் இருந்தவர்களில் 150 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
உலக வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையில் உயிர்களை பலி கொண்ட ரயில் விபத்தாக இது அமைந்தது. 10 விநாடிகள் மட்டுமே நீடித்த நில அதிர்வால் ஏற்பட்ட சுனாமி, 1700 உயிர்களை பலிகொண்டது.