கீரிமலை சிவன் கோவில் சிங்களவர்களால் இடித்து அழிப்பு
08 Mar,2023
கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை விஷ்ணு ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர், கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று ஆலயத்தின் தற்போதைய நிலையை பார்வையிட்ட போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கீரிமலை சிவன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆலயத்தின் வசந்த மண்டபம் முழுமையாக இடித்து தள்ளப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பகுதிகள் உள்ளதாகவும், ஆலய விக்கிரகங்களில் பிள்ளையார், முருகன் என்பனவற்றை காணவில்லையெனவும், அருகில் இருந்த மிக பழமைவாய்ந்த சிவன் ஆலயம் காணப்பட்ட இடத்தில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கீரிமலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட செய்தி சைவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.