ஆனையிறவில் 26 அடி உயர நடராஜர் சிலை!
07 Mar,2023
கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார்.