யாழில் மீண்டும் சிங்களவர் கைவசமாகிய தமிழரின் பூர்வீக சொத்து!
27 Feb,2023
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் அமைந்துள்ள நிலாவரைக் கிணறானது தொன்று தொட்டுத் தமிழர் பாரம்பரிய இடமாகவும் யாழில் நீர் ஊற்றுக்கூடிய அதிசயமான கிணறாகவும் காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இடத்தினைக் அண்மையில் தொல்பொருளியல் திணைக்களம் தனதாக்கிக் கொண்டுள்ளதுடன் அங்கு இராணுவப் பாதுகாப்பினையும் அதிகரித்து இருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் குறித்த இடத்தில் சிறிய குடிசை அமைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டு இருந்தது இதனையறிந்த மக்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் குறித்த இடத்திற்குச் சென்று பாரிய எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனையறிந்த இராணுவ உயர் அதிகாரி ஒருவர் குறித்த இடத்திற்கு வருகைதந்து சிறு தவறு நடந்துள்ளதாகத் தெரிவித்து குறித்த கூடாரத்தையும் புத்தர் சிலையையும் அகற்றிவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.