பிரபாகரன் வெளிப்பட மெழுகுதிரி போராட்டம்ஸ அல்லே-லூயா கோஷ்டியுடன் இணைந்த பழ நெடுமாறன்
17 Feb,2023
சில தினங்களுக்கு முன்னதாக, சென்னையில் வைத்து ஐயா பழ நெடுமாறன் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை ஒரு குழு வெளியிட்டது. அதில் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இறக்கவில்லை. மதிவதனி அக்கா மற்றும் துவாராகவோடு அவர் விரைவில் வெளிப்பட உள்ளார் என்று அறிவித்தார்கள். இந்த அல்லே-லூயா கோஷ்டியினர், எப்படி பழ நெடுமாறனை வைத்து காய் நகர்த்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஞாபக மறதி நோயில் உள்ள, பழ நெடுமாறன் ஐயாவை வைத்து இந்தக் குழு பெரும் நாடகம் ஆடி வருகிறது.
பெரும் தொகைப் பணத்தை புலம்பெயர் மக்களிடம் இருந்து திரட்ட இந்த போலி நாடகம் அரங்கேறியுள்ளது. இவர்கள் யார் யார் என்று விரைவில் உங்கள் இணையத்தில் இவர்கள் முகத்திரை கிழிக்கப்படும். சுவிஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பணம் திரட்டும் நடவடிக்கையில் ஏற்கனவே சிலர் இறங்கியுள்ளார்கள். இந்த குழு உங்கள் வாசல் தேடி வந்தால் செருப்பால் அடித்து விரட்டுங்கள் மக்களே. இதேவேளை, தலைவர் வருகையை நாம் மெழுகுதிரி ஏற்றி வரவேற்போம் என்று இவர்கள் இறங்கியுள்ளார்கள்.
பாருங்கள் இந்தப் பெருங் கூத்தை, தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளதோடு. சேர்க்கப்படும் பணம் எங்கே செல்ல உள்ளது என்பதும் பெரும் சந்தேகமான விடையம் தான். ஏன் என்றால் ஸ்ரீலங்கா அரசு இது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.