இவ்வளவு நாள் மறைமுகமான வாழ்க்கையை பிரபாகரன் வாழ்ந்தார் என்று சொல்லுவது அவருக்கு அவமரியாதையை உண்டாக்குவதற்கு தானே தவிர நல்ல எண்ணத்தில் இல்லை என சட்டதரணி துரைசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திக்கு பின்னால் இந்தியாவின் உளவுத்துறையும் பாரதி ஜனதா கட்சியின் தலைமையும் சதி செய்துள்ளனர்.
அந்த சதியின் அடிப்படையில் தான் பிரபாகரன் இப்போது உயிருடன் இருக்கிறார் என சொல்லப்பட்டு வருகின்றது.
பாஜக உடன் பழ.நெடுமாறன் விலை போய்விட்டார். அதனுடன் இணைந்துவிட்டார் என்பதே இந்த பொய்யின் அடிப்படை காரணம்.
இவ்வளவு நாள் மறைமுகமான வாழ்க்கையை பிரபாகரன் வாழ்ந்தார் என்று சொல்லுவது அவருக்கு அவமரியாதையை உண்டாக்குவதற்கு தானே தவிர நல்ல எண்ணத்தில் இல்லை.
இவ்வளவு நாள் இலங்கை மக்கள் கஷ்டப்படும் போது அவர் எங்கோ சொகுசு வாழ்க்கை வாழமாட்டார். களத்திற்கு வந்திருப்பார்.
இறுதி நாள் யுத்தத்தில் மற்ற தலைவர்கள் எல்லாம் அதாவது பொட்டு அம்மன், அகிலன் எல்லோரும் இறந்த பிறகு நடேசன் வெள்ளை கொடி ஏந்திக்கொண்டு சென்றபோது இலங்கை அரசாங்கம் சுட்டு கொண்டது.
பிரபாகரனின் மூத்த மகனையும் இலங்கை அரசாங்கம் சுட்டு அவரும் இறந்துவிட்டார்.
இதன் பின்னர் தலைவர் நேரடியாக களத்தில் இறங்கினார், இதற்கமைய மாவீரர் பிரபாகரன் அவர்கள் 2009.05.18 அன்று வீர மரணம் எய்தினார்.
திராவிட கலக்கத்திற்கு எதிராக பிரபாகரனை வைத்து இந்தியாவின் உளவுத்துறையும் பாரதி ஜனதா கட்சியின் தலைமையும் இன்னும் சில தலைவர்களும் இணைந்து செய்த சதியாகவே நாங்கள் இது பார்க்கின்றோம்.
மற்றபடி பிரபாகரனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும் அப்போதே அவர் இறக்கவில்லை என பலர் கூறினார்கள். பிரபாகரனை நன்கு அறிந்த யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள்.
அவர் இயற்கையாகவே போர் குணம் நிறைந்த ஒருவர். மறைந்து வாழ வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது. பிரபாகரன் மீது இரண்டு வழக்குகள் அந்த காலத்தில் பிரபாகரன் மீது சென்னையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில் ஒன்று ராஜூகாந்தி வழக்கு அதில் 26 வது குற்றவாளியாக பிரபாகரன் சேர்க்கப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றில் வழக்கு நடந்தது. பிரபாகரனை கைது செய்யும் நடவடிக்கை தோல்வியுற்ற பின்னர் அவரது தளபதி பொட்டம்மான், அகிலா மற்றும் பிரபாகரன் மீதான வழக்குகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.
அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் வழங்கிய மரண சான்றுதலுக்கமைய அந்த வழக்கு 25.10.2010 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது.
இதனை அடிப்படையாக கொண்டு அவர் மீதான வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டன. அவர் மீது தற்போது எந்த வழக்கும் கிடையாது.
அவருடைய இறப்பு சான்றிதழ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருக்கின்றது அவர் இருக்கிறார் என்பது பொய் பிரச்சாரம். 1952 இல் இருந்து பாரதி ஜனதா கட்சி இலங்கையர்களுக்கு எதிராக தான் செயற்பட்டது.
ராஜூவ்காந்தி கொலையை மையமாக கொண்டு பலருடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள் இப்போது ஏன் இலங்கைக்கு சென்று வந்தனர்.
இலங்கைக்கு சென்று வந்ததும் இப்படி ஒரு பொய்யான கருத்தை கூறுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் வளர வாய்ப்பில்லை.
அதனால் தான் பிரபாகரன் எனும் இந்த ஆயுதத்தை எடுத்து இலங்கையர்களுக்கு ஆதரவளிப்பது போல் காட்டுகிறார்களே தவிர அவர்கள் கூறும் விடயத்தில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார்.