தலைவர் இருக்கிறார் என்று சொல்லி சிங்கள அரச உளவாளிகள் காசு கறக்க பெரும் திட்டம் !
15 Feb,2023
நேற்றைய தினம், இந்தியாவிலிருந்து பெரும் எடுப்பில் வெளியான செய்தி தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், உயிருடன் உள்ளார் என்பது தான். இதனை ஞாபக மறதி நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஐயா நெடுமாறன் அவர்கள் கையொப்பமிட்ட கடிதம் மூலம் ஒரு கும்பல் வெளியிட்டுள்ளது. இதில் அண்ணன் சீமான் அவர்கள், வைகோ ஐயா, என்று பலரைக் கலந்து கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. இதேவேளைஸ
டெமென்ஷியாவில்(ஞாபக மறதி நோயில்) உள்ள ஐயா நெடுமாறன் கையொப்பமிட்ட கடிதத்தை வெளியிட்ட ஒரு கும்பல். உடனடியாக சுவிஸ், யேர்மனி, பிரித்தானிய , கனடா என்று பல நாடுகளில் மக்களிடம் காசைக் கறக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை மிக மிக நேர்த்தியாக இலங்கை அரச உளவாளிகளோடு இணைந்து ஒரு கும்பல் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. தேசிய தலைவர், இறுதி யுத்தத்தில் வாக்கி-டோக்கி மூலம் பேசிய சில விடையங்களைச் சிங்கள அரசு ஊடறுத்துப் பதிவு செய்து வைத்துள்ளது. அந்த ஆடியோ பதிவை வெட்டி ஒட்டி. பின்னர் புது பதிவாக வெளியிட இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. இதனைத் தமிழர்களே நம்ப வேண்டாம். இதுஸ
இலங்கை அரச புலனாய்வுத் துறையால் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட ஒரு செயல். ஒட்டு மொத்த தமிழர்களும் பெரும் பணத்தைக் கொடுத்தால். அவை அனைத்தும் இலங்கை சென்று, இலங்கையை முன்னேற்றப் பயன்படும். அது மட்டும் அல்ல, எந்த ஒரு நாட்டிலும் தேசிய தலைவரோ இல்லை, மதிவதனி அக்கா, துவாரகா இருந்தால். சர்வதேச ஊடகமான BBC, ITV, மற்றும் அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்து இருக்கும். ஆனால் , இன்றைய நிலையில், காசை எடுத்து இலங்கை அரசுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க, சில ஒட்டுண்ணிகளால் இந்த ஈனச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனைத் தமிழர்களே நம்ப வெண்டாம்