விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்- பழ.நெடுமாறன்
14 Feb,2023
பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தஞ்சாவூர்: இலங்கையில் தனி தமிழ் ஈழம் நாடு கேட்டு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக ஆயுத போராட்டம் நடத்தினார்கள். கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடைபெற்றது. அப்போது சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளிடம் ஆயுதம் பெற்ற இலங்கை ராணுவம் ஈவு இரக்கம் இல்லாமல் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றனர்.
2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடந்த சண்டையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் இறந்து கிடப்பதுபோன்ற படத்தையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. இருப்பினும் பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் தான் இருக்கிறார் என பல்வேறு தமிழ் தேசிய தலைவர்கள் அவ்வப்போது கருத்து வெளியிட்டு வந்தனர். இதையும் படியுங்கள்: பழ.நெடுமாறனை விசாரிக்க உளவு அமைப்புகள் முடிவு இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மை அறிவிப்பு என்ற தலைப்பில் தஞ்சாவூரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச சூழலும்,
இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழ் ஈழ தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்,