இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்துக்கு விக்கி போகட்டும்!
12 Feb,2023
இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள்.
விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்துள்ளார். அவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான். விக்னேஸ்வரன் தெற்கில்தான் படித்தார். தொழில் செய்தார். தற்போது வடக்கு மக்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல் பாசாங்கு செய்கின்றார். அவர் சந்தர்ப்பவாதி" - என்றார்.