இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்குக் கரிநாள்ஸ
07 Feb,2023
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள் மீதுஸ மிரட்டல் விடுப்பதன் பின்னணி என்ன!!
கடந்த 04 ஆம் திகதி வடக்கிலிருந்து ஆரம்பமாகிய மக்கள் எழுச்சிப் பேரணி எதிர்வரும் 07 திகதி திருகோணமலையூடாக மட்டக்களப்பினைச் சென்றடையவுள்ளது, இதில் கலந்து கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் அரசியல் பிரமுகர்கள், சமூகநலத் தொண்டு நிறுவனங்கள், தமிழ் மக்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் ஆகியோர் தமிழ் மக்களுக்குரிய சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம், தமிழர் தேசம்மீதான ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்களைக் கோரி ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னெடுத்துச் செல்கின்றனர்,
இந்நிலையில் இன்று முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்ட பேரணியை முல்லைத்தீவில் வைத்துப் பல்வேறுபட்ட வாகனங்களில் பின்தொடரும் இராணுவப் புலணாய்வாளர்கள் மற்றும் அரச புலணாய்வாளர்கள் இப்பேரணியில் செல்வோரை பின்தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துத் தொடர்ந்து மிரட்டி வருதாகப் பேரணியில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.