இந்தியா உட்பட கனடா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் இணைந்துஸ இலங்கைக்கு விடுத்துள்ள அழுத்தம்!!!
03 Feb,2023
ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று கலந்து கொண்ட பருவகால மதீப்பிடு தொடர்பான வாதத்தில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையில் தற்பொழுது அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை இல்லாது ஒழிக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளதுடன் அரச சார்பற்ற அமைப்புக்களின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்தி மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களின் மீது தண்டனைகளை பலப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்தியப் பிரதிநிதி இலங்கைக்குத் தேவையான பொருளாதார உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், இலங்கை அரசு இந்திய வம்சாவளித் தமிழர்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தமிழர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் 13 வது திருத்தச்சட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதுடன் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்தி மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன்போது சில நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.