யாழ் - இந்திய விமான சேவையை அடுத்து படகு சேவை : வெளியான அறிவிப்பு
13 Dec,2022
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் மீள் இயக்க விழாவில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
படகு சேவை
யாழ் - இந்திய விமான சேவையை அடுத்து படகு சேவை : வெளியான அறிவிப்பு |
கொரோனா தொற்றுக் காரணமான பயணத்தடைகளால் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் நேற்றுமுதல் மீண்டும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
பலாலி விமான நிலையத்தின் மூலம் வடக்கின் பொருளாதாரத்திற்கான சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இந்த விமான நிலையம் எதிர்வரும் காலங்களில் சர்வதேச நாடுகளுக்கான விமான நிலையமாக இயங்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என பயணிகள் தெரிவிக்கும் நிலையில்,
உள்ளக விமான சேவை
யாழ் - இந்திய விமான சேவையை அடுத்து படகு சேவை : வெளியான அறிவிப்பு | Ferry Services To Begin From Jaffna Tamil Nadu
இந்தச் சேவையை ஆரம்பிக்கும் வகையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ, இலங்கையில் சுற்றுலாவிற்கான புதிய இடங்களை கண்டறிய வேண்டும் எனவும் அதற்கான ஒரு இடமாக யாழ்ப்பாணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உள்ளக விமான சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய விமான சேவை நிறுவனத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.