சர்வதேச விமான நிலையங்களோடு ”யாழ்ப்பாணம்”திரையில் தெரிகிறது தமிழனின் பெருமை பாருங்கள்
12 Dec,2022
யாழ் பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்தியாவுக்கு விமான சேவைகள் ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே ஒரு தமிழர் இந்த விமான சேவையை இயக்க இருந்தார். அவரிடம் அதற்கு ஏற்ற பண, பலம் இருக்கவில்லை. அதனால் அவர் முயற்ச்சியைக் கைவிட. இந்திய அரசு அதனைக் கையில் எடுத்துக் கொண்டது. தற்போது இந்திய விமானசேவை நிறுவனம் ஒன்றே, பலாலி -இந்திய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில், சிங்கப்பூர், அபுதாபி, டாக்கா , கட்டார் என்று தெரியும் சர்வதேச விமான நிலைய இடத்தில், தற்போது “”யாழ்ப்பாணமும்”” தெரிகிறது. இது தமிழர்களுக்கு ஒரு பெருமை தான். உலகில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இணைந்து, பணத்தைப் போட்டு, இந்த விமான சேவையை தமிழர்களே ஆரம்பித்து, திறம்பட நடத்தி இருக்க முடியும். ஆனால் தமிழர்கள் மத்தியில் எங்கே ஒற்றுமை இருக்கிறது சொல்லுங்கள் ? கொழும்பில் இருந்து இந்தியா செல்வதை விட 10,000/= ரூபா குறைந்த விலையில், யாழில் இருந்து இந்தியா செல்லக் கூடியதாக இருக்கிறது. இதனால்
சிங்கள மக்கள் இனிஸ யாழ் வந்து யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா சென்றாலும் ஆச்சரியப்பட இல்லை. மேலும் பலாலி விமான நிலைய Duty Free கடைகளை விஸ்தரித்து, அதனைச் சுற்றியுள்ள இடங்களில் ஹோட்டல்களையும் அமைக்க முடியும். யாழ்ப்பாணம் முன்னேற பெரும் வாய்ப்புகள் உள்ளது. புலம்பெயர் தமிழர்கள் ஒன்றினைந்து, இதனை ஒரு திட்டமாக மேற்கொள்வது நல்லது.