வெளியானது யாழ்ப்பாணம் - சென்னை விமான கட்டணம்!
08 Dec,2022
வரும் பன்னிரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கட்டண விபரம்
அந்தவகையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய ரூபாவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 9 200 இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகின்றது.
ஒரு வழி பயணச்சீட்டு விபரமே இதுவாகும். அதேவேளை விமான பயணசீட்டுகள், இருவழி பயண சீட்டுக்கு ஒரே கட்டணமே வசூலிக்கப்படும் நிலையில் , யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு போக ஒரு கட்டணமும், சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வர ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது.
ஏனெனில் யாழில் விமானநிலைய நுழைவுவரி 60 டொலர் பயணச்சீட்டில் உள்ளடங்குகிறது. ஆனால் இந்தியாவில் விமானநிலைய நுழைவு வரி இல்லை இதன் காரணமாகவே இந்த அங்கிருந்து வருகையில் ஒருகட்டணமும், இங்கிருந்து செல்கையில் மற்றுமொரு கட்டணமுமாக வசூலிக்கப்படுகின்றது.
விமான சேவைகளை நிறுத்திய கோட்டா
அதேவேளை மைத்திரிபால ஜனாதிபதியாக பதவி வகித்த நல்லாட்சி அரச காலகட்டத்தில் 2019 அக்டோபர் மாதம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் அலையன்ஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கியது.
அதன்பின்னர் 2019 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான நிலையில் அதே ஆண்டு நவம்பரில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.