பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் திடீர் மரணம்
07 Dec,2022
பேராதனை தாவரவியல் பூங்காவிற்குச் சென்ற பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பிரித்தானியாவைச் சேர்ந்த 69 வயதுடைய பெனடிக் லிட்டில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றுலாப் பயணி பெண் ஒருவருடன் நேற்று முன்தினம் (05) கண்டிக்குச் சென்று காலை 10.30 மணியளவில் பேராதனை தாவரவியல் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்த போது, சுகயீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.