இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை
04 Dec,2022
வட மாகாணத்திற்கும் -தமிழ்நாட்டிற்கும் இடையில் கப்பல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது
இந்த திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 500 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதிகள் கப்பல் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
டிசம்பர் 12 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வாரத்திற்கு ஐந்து விமான சேவைகள் கோரப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் உள்ள கண்டி, நுவரெலியா மற்றும் நாட்டின் தென் பகுதிகள் உட்பட பயணிக்கும் வகையில் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என்றார்.