இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி விதிக்கப்படாது
04 Dec,2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி விதிக்கப்படாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
டொலராக அனுப்பும் பணத்தை பலவந்தமாக ரூபாவாக மாற்றப்படாது என்றும் வங்கி இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என வெளியான தகவல் வதந்தியாகும் என இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வரி அறவிடப்படுவதில்லை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருக்கலாம்.
அவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.