இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவி செய்யவில்லை
02 Dec,2022
சீனா வீட்டுக்கு போ என்ற கோசத்திற்கு தலைமை ஏற்கப் போகிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவி செய்யவில்லை அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சி செய்கிறது என நான் அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்த இந்த கருத்துக்கு, கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் வழங்கியுள்ளார்.
இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும். ஆகவே சீனா இந்த செயல்பாட்டை நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு 22 மில்லியன் இலங்கை மக்களுக்கு நன்மை செய்ய விரும்பினால், இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடனை ரத்துச் செய்ய வேண்டும் அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கான கடன் மறுசீரமைப்புக்கு உதவ முன் வரவேண்டும் எனவும் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார், சாணக்கியனுக்கு தமது கருத்தை வெளியிட உரிமையுள்ளது. இருப்பினும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதே சமயம் சீனா வீட்டுக்கு போ என்ற சாணக்கியனின் கோஷம் தொடர்பிலும் ஹர்ச தமது கருத்தை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்திற்கு பதிலளித்து சாணக்கியன் குரல் எழுப்பிய போதும், சாணக்கியனுக்கு சபை தலைவர் அனுமதி வழங்கவில்லை.
இதனை தொடர்ந்து தமது கட்சி நாடளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கருத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினரான ஹர்ச டி சில்வா, கருத்து வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விவாதித்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.