நடு வீதியில் தமிழ் இளைஞனுக்கு மரண அடி..! இராணுவம், காவல்துறை முர்க்கத்தனம் -
28 Nov,2022
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இளைஞர் ஒருவர் சிறிலங்கா இராணுவம், விசேட அதிரடிப்படை, காவல்துறையினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அண்மையில் இன்று இரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
28 வயதுடைய பாலமுரளி நிறோசன் என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த வீதியில் தலைக்கவசம் அணியாது சென்ற பொழுதே இவர் இவ்வாறு மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதாகவும், வாய், மூக்கு என உடைக்கப்பட்ட நிலையில், தாக்கப்பட்ட நபர் மானிப்பாய் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.