யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு அதிரடியாக நுழைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
31 Oct,2022
யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே தற்போது மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது.
இதன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒஎம்பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்ச வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.