இலங்கையில் இருந்து அதிகளவிலானோர் தமிழ் நாட்டிற்கு தஞ்சம்!!
09 Oct,2022
இலங்கையில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிளவிலான யாழ் மற்றும் மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் தழிழ் நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைந்து கொன்டு வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த மார்ச் மாதம் தெதாடக்கம் இதுவரையில் 174 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மன்னாரை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 05 பேர் மூன்று குழந்தைகள் உட்பட தனுஷ்கோடி ஜந்தாம் மணல் திட்டியில் இரண்டு நாட்களாக தவித்துக்கொன்டிருந்த நிலையில், தமிழக கடலோர காவல் துறையினரால் மீட்கப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.