முல்லைத்தீவில் குழப்ப நிலை - மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்
05 Oct,2022
முல்லைத்தீவில் சுருக்கு வலை மீன்பிடியை முன்னெடுப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் முல்லைத்தீவு பிரதான பஸ் தரப்பிடத்திற்கு அருகிலிருந்து கடற்றொழில் திணைக்களத்தை நோக்கி பேரணியாக சென்ற போது, கடற்கரை வீதியில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வீதித் தடைகளையும் மீறிச் செல்ல முயற்சித்த போது, பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மயக்கமுற்ற மீனவர் ஒருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணீர்ப்புகை பிரயோகத்தின் பின்னர், எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்