திருகோனேஸ்வரர் ஆலயம் ஆக்கிரமிப்பு!
04 Oct,2022
திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதனை அரசாங்கம் மறுத்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய அமச்சர் விதுர விக்கிரமநாயக்க இக் குற்றசாட்டினை மறுப்பதாக தெரிவித்தார்.
திருக்கோனேஸ்வரம் ஆலயத்தின் காணிகள் அபகரிக்கப்பட்டு புதிய வியாபாரத் தளங்கள் அமைக்கப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஏற்கனவே சபையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறிதரன் கூறுகையில், நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியினை கொன்டிருந்த ஆலயம் தற்போது 18 ஏக்கர் நிலப்பரப்பினை மாத்திரம் கொன்டுள்ளதாகவும் விவாதத்தினை முன்வைத்தார்.
இதற்கு பதில் வழங்கிய விதுர விக்கிரமநாயக்க, நாடு இன்னும் பிரிந்து செயற்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட நலன்களைக் கொன்டு செயற்படுகின்றனர் எனவும் ஒவ்வொருவரும் வரலாறுகளைக் தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவித்ததோடு வரலாறுகளை பற்றி சிந்திக்காமல் நடமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது தொடர்பாக விரைவில் திருகோணமலைக்கு சென்று ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.