அரசியல் கைதிகள் விடுதலைஸ ! ரணில்- சுபாஷ்கரன் மற்றும் பிரேம் சிவசாமி சந்திப்பில் தமிழர்களுக்கு கிடைக்க இருக்கும் பெரும் விடுதலை
21 Sep,2022
பிரித்தானிய மகாராணியாரின் இறுதிக் கிரிகையில் கலந்து கொள்ள, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் வந்திருந்தார். நேற்றுக் காலை(19) அவர் கலந்து கொண்டு விட்டு மாலை, பார்க் ஹோட்டலில் வைத்து, லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் திரு சுபாஷ்கரன் அல்லிராஜாவைவும், துணை பொறுப்பாளர்(deputy chairman) பிரேம் சிவசாமி அவர்களையும் சந்தித்து உரையாடினார். இதில் தமிழர்களின், அரசியல் தீர்வு தொடர்பாகவும், மேலும் தமிழர்கள் இலங்கையில் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக அலசி ஆராயப்பட்டது. இதனை அடுத்து திரு சுபாஷ்கரன் அவர்கள், இலங்கையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, குற்றச் செயல் புரிந்ததாக கூறி பல வருடங்களாக சிறையில் வாடும், தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில், அது தொடர்பாக தாம் நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக உறுதி மொழி வழங்கியுள்ளதோடு. சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின், விபரங்களை தன்னிடம் கையளிக்குமாறு கூறியுள்ளார். எனவே இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை உடனே திரட்டி, ரணில் விக்கிரமசிங்கவிடம் கொடுக்கும் நடவடிக்கையில் லைக்கா நிறுவனம் இறங்கியுள்ளது. தமிழர்களே, உங்கள் உறவினர்கள் அரசியல் கைதிகளாக சிறையில் இருந்தால் உடனே தொடர்பு கொண்டு அவர்களது விபரங்களை தாருங்கள். இன்னும் சில தினங்களில் பட்டியலை தயாரித்து, அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் திரு சுபாஷ்கரன் எடுத்துள்ள இந்த முயற்ச்சியால், தமிழர்களுக்கு ஒரு விடிவும் விடுதலையும் கிட்ட உள்ளது என்பது, மிக மகிழ்ச்சியான விடையமாக உள்ளது. இலங்கையில் ஏற்கனவே பல தொண்டுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை செய்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். எனவே விரைவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆக உள்ளார்கள் என்ற நல்ல செய்தி தமிழர்களுக்கு கிட்டியுள்ளது.