வெளிநாட்டுக்கு சட்டவிரோத படகு பயணம்; 85 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
12 Sep,2022
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கொழும்பு, இலங்கை கடற்படையை சேர்ந்த ரணவிக்ரமா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு
கொண்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி படகு ஒன்று சட்டவிரோத வகையில் சிலரை ஏற்றி கொண்டு பட்டிகலோவா பகுதியில் சென்று கொண்டு இருந்துள்ளது. இதனை கவனித்த கடற்படை அதிகாரிகள் படகை தடுத்து நிறுத்தினர். அந்த படகில் 85 பேர் பயணித்து உள்ளனர். அவர்களில் 60 பேர் ஆண்கள். 14 பேர் பெண்கள் மற்றும் 11 பேர் குழந்தைகள் ஆவர். அவர்களிடம் விசாரணை
நடத்தியதில் பட்டிகலோவா, திரிகோணமலை, முத்தூர், கிளிநொச்சி, ஜாப்னா மற்றும் மது உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சட்டவிரோத கடல் பயணத்திற்காக படகை கடற்படை கைப்பற்றியது. வெளிநாட்டுக்கு சட்டவிரோத வகையில் செல்ல முயன்றதற்காக 85 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் திரிகோணமலை
துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்பு திரிகோணமலை துறைமுக போலீசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இதேபோன்று முகத்துவாரம் பீச் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற 5 பேரையும் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களுக்கு, 85 பேரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.