தமிழர்களின் பலம் இது தான்! இலங்கையை மாற்றிக் காட்டவும் முடியும் -சாணக்கியன்
07 Sep,2022
தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்திலே நாட்டில் நிலவும் போசாக்கு, உணவுத் தட்டுப்பாடு என்பவற்றை தீர்க்க தமிழர்களால் முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் உரையாற்றிய அவர், புலம்பெயர் தேசத்திலே பல தமிழர்கள் முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள். இலங்கையின் மொத்தக் கடனிலேயே பத்து வீதத்தை அடைக்க அவர்களால் முடியும்.
இவ்வாறானவர்களில் பலர் அரசியல் தொடர்பில்லாமல் இருப்பவர்கள். புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் கூட இவர்கள் அங்கம் வகிக்கவில்லை.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல அறிவாளிகள் சொன்ன விடயம். தமிழருடைய பலம் இலங்கையில் இருந்து வெளிய சென்று வாழுகின்ற தமிழர்கள் தான் என்று.
அவர்கள் அங்கே 10 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து திட்டங்களை தீட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது.
தமிழருக்கான அரசியல் அதிகாரங்களை வழங்கும் பட்சத்தில், தமிழருடைய அரசியல் பிரச்சினைகளை தீர்க்கும் பட்சத்தில் இங்கே அவர்கள் முதலீடுகளை செய்ய தயார் என்று சொல்லி இருக்கிறார்கள்.
மட்டக்களப்பில் சாபக்கேடான நிகழ்வு
இன்று நாங்கள் போசாக்கின்மை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மட்டக்களப்பில் இன்று நிலைமை மோசமாக இருக்கிறது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு சாபக்கேடான நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது.
தமிழ் மக்கள் விடுதலைப்புகள் கட்சியினுடைய மாநாடு அண்மையிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. அங்கு எவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பொழுது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய தலைவர், தன்னுடைய கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு நாமல் ராஜபக்சவை அழைத்து வந்திருக்கிறார்.
இன்று நாமல் ராஜபக்ச தனது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாதவாறு ஒரு மூலையில் ஒழித்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு இருக்கும் பொழுது மேடை அமைத்து அந்த மேடைகளில் அவரை வைத்து அழகு பார்க்கும் தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சியின் தலைவரின் நடவடிக்கை வேடிக்கையானது.
தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சியின் தலைவர் இந்த நடவடிக்கை மூலம் மட்டக்களப்பு மக்களை தரம் குறைந்ததாக காட்டியிருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.