அவசர சந்திப்பை கோரியுள்ள சீனா-!பின்வாங்கிய சீனக்கப்பல் : என்ன நடந்தது தெரியுமா?
08 Aug,2022
சீனாவின் உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இலங்கை துறைமுகத்திற்கு வருகை தரவிருந்த சீனாவின் உளவு கப்பல் பயணத்தை ரத்து செய்துள்ளது.
வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததால் தங்கள் துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது.
இதனால் சீனா தங்கள் உளவு கப்பலை அங்கு நிறுத்த முடிவு செய்தது. இந்த முயற்சிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.இதனால் கப்பலை தற்போது அனுப்ப வேண்டாம் என சீனாவிடம் இலங்கை கூறியுள்ளது.
அவசர சந்திப்பை கோரியுள்ள சீனா-!
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும், உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு, கொழும்பு கோரியதை அடுத்து, சீனத் தூதரகம் இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் அவசரச் சந்திப்பை கோரியுள்ளது.
சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு ஆகஸ்ட் 5 திகதியிட்ட ராஜதந்திர ‘மூன்றாம் நபர்’ குறிப்பில், இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பல், ஹம்பாந்தோட்டைக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.
இதனையடுத்து சீன தூதுவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசி;ங்கவை சந்தித்து, பீஜிங்கின் ஆலோசனையை பெற்று பதில் கூறுவதாக அறிவித்திருந்தார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
இந்தநிலையிலேயே சீன தூதரகம், இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளின் சந்திப்பை கோரியிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.