இலங்கையில் அவசரநிலை ஆக., 14 வரை நீட்டிப்பு
29 Jul,2022
.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே சிங்கபூருக்கு தப்பினார்.இந்நிலையில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங் பதவியேற்றார்.இவரும் பதவி விலகக் கோரி பொது மக்கள் போராட்டம் செய்தனர்.பொது சொத்துகள் பாதுகாப்பு,பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு,இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை ரணில் விக்கிரமசிங் கடந்த ஜூலை 19ம் தேதி அறிவித்தார்.
அதன் பின் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங் முதல்முறையாக அதிபராக தேர்தெடுக்கப்பட்டார்.இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன்பு,ரணில் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,அமலில் உள்ள அவசரநிலை வரும் ஆக., 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக
அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.