கோட்டபாய தப்பிக்க ரூட் போட்டுக் கொடுத்த KP: மலேசியா இல்லையேல் இந்தோனேசியா செட்டில் ஆக வாய்ப்பு !
14 Jul,2022
இலங்கையில் இருந்து கோட்டா தப்பிச் சென்று, எந்த நாட்டில் வசிக்க ஏதுவாக இருக்கும் என்று KP ரூட் போட்டுக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாலை தீவில் உள்ள ஒரு தீவான குரும்பா விலேஜ் என்னும் தீவில் கோட்டா தங்கியுள்ள நிலையில். அவர் மலேசியா அல்லது இந்தோனேசியா செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இனி எப்படி மறைந்து வாழவேண்டும் ? என்று KP கோட்டாவுக்கு அறிவுரை கூறியுள்ளாராம். அமெரிக்கா விசா மறுத்துள்ள நிலையில். ஈழத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் எந்த ஒரு நாட்டிலும் கோட்டா தலை வைத்தும் படுக்க முடியாது. இதனால் தனக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை போட்டுக் கொண்டு, மீதிக் காலத்தை கழிக்க வேண்டியது தான். இன் நிலையில் அவர் பல நாடுகளுக்கு செல்லக் கூடிய வசதி கொண்ட ஒரு கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த இடத்தில் ஆசியாவில் தாங்குவார் என்று கூறப்படுகிறது.
கோட்டாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்-! அப்போ இன்னும் கோட்டா பதவி விலகவில்லையா??
ஜனாதிபதி தற்போது வெளிநாட்டுக்கு சென்றிருப்பதன் காரணமாக, ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறு ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 37 (1) இற்கு அமைவாக இவ்வாறு கோட்டாபய ராஜபக்வினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோட்டா இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று கூறியது அனைத்தும் பொய்யா??இது நாட்டு மக்களை ஏற்றும் ஒரு நாடகமா ?? இறுதியில் பார்க்க போனால் சபாநாயகர் கூறியது பொய்யா? என பல கேள்விகள் எழுப்ப தோன்றுகின்றது