திரும்பி வர உள்ள கோட்டபாய(Re-Entry ) ராணுவத்தை களம் இறக்கி அனைத்தையும் கைப்பற்ற கடும் முயற்ச்சி !
14 Jul,2022
இலங்கையில் ராணுவத்தை கொண்டு போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விட்டு. மாலை தீவில் இருந்து மீண்டும் இலங்கை வர கோட்டபாய திட்டம் தீட்டி உள்ளாராம். தான் ரீ-என்ரி கொடுக்க வேண்டும் என்றும். ராஜபக்ஷர்கள் என்றால் யார் என்று மக்களுக்கு காட்ட வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளாரம் கோட்டபாய. இதனால் அவர் ஜனாதிபதி பதவியை துறக்கவில்லை. இலங்கை அரசியல் அமைப்பில், ஒரு ஜனாதிபதி இடைக்கால ஜனாதிபதியாக ஒருவரை நியமிக்க முடியும். உண்மையான ஜனாதிபதி பதுங்கி இருந்து விட்டு. பின்னர் வெளியே வந்து, மீண்டும் ஜனாதிபதி ஆக முடியும். அப்படியான விநோதமான ஒரு அரசியல் சட்டம் உள்ளது. அந்த சரத்தை பாவித்து. கோட்டபாய ரணிலை தற்காலிக பிரதமர் ஆக்கியுள்ளார். அது போக ராணுவத்தை பாவித்து எல்லா ஆர்பாட்டங்களையும் அடக்கி விட்டு. பின்னர் மாலை தீவில் இருந்து கொழும்பு வருவதாக கோட்டபாய கூறியுள்ளார். இது இவ்வாறு இருக்கஸ.
இலங்கையில் இதுவரை நடந்த மாபெரும் மக்கள் போராட்டம் 2 டாக உடைந்துள்ளது என்ற, பெரும் துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இயக்கத்தை 2டாக உடைப்பது என்பது ரணிலுக்கு ஒன்றும் புதிதல்லவே. நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தில் இணைந்து பெரும் அளவில் JVP உறுப்பினர்களும் பங்கு கொண்டார்கள். இலங்கையில் JVP கட்சிக்கு தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு உள்ளது. இதனால் போராட்டக் காரர்களில் ஒரு சாரார் JVP மற்றொரு சாரார் பொது மக்களாக உள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே இன்று முதல் முறுகல் நிலை தோன்றியுள்ளது. ஒரு சாரார் ரணில் தலைமையை ஏற்கிறார்கள். ஆனால் மக்கள் ரணில் தலைமையை ஏற்க்கவில்லை. இந்த சூழ் நிலை காரணமாக போராட்டம் வெகுவாக நீர்த்துப் போகும் சூழல் தோன்றுவதோடு. இது கோட்டபாயவுக்கு ஏற்ற நிலையை தோற்றுவிக்கும். அனைவரும் கோட்டபாய பயந்துஸ
நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர் அப்படி செல்லவில்லை. இலங்கையின் நிலமையை வேறு ஒரு நபரை பாவித்து கட்டுப் படுத்தி விட்டு. மீண்டும் இலங்கை வந்து ஆட்சி செய்யவே கோட்டபாய எண்ணியுள்ளார் என்பதே உண்மை நிலை ஆகும்.