மாலத்தீவுக்கு தப்பி சென்ற கோத்தாபய குடும்பம்..? – இந்தியா உதவி செய்யவில்லை!
13 Jul,2022
இலங்கையில் அதிபர் கோத்தாபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் அவர் மாலத்தீவில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய நிலையில், அங்கிருந்து தப்பிய அதிபர் கோத்தாபய ராஜபக்சே தலைமறைவானார்.
அவர் இலங்கையிலிருந்து தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இலங்கையில்தான் இருப்பதாக அந்நாட்டு சபாநாயகர் கூறியிருந்தார். இந்நிலையில் இலங்கையிலிருந்து தப்பிய கோத்தாபய குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முன்னதாக அவரது அதிபர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவி செய்யவில்லை - இந்திய தூதர்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை இலங்கைக்கு வெளியே அனுப்புவதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் திப்புகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கையர்கள் தங்களின் வளம் மற்றும் முன்னேற்றத்திற்கான விருப்பங்களை உணரக் கோரும் வேளையில், இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதை இந்தியா தொடரும் என்று வலியுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.