கோட்டாவுக்கு எச்சரிக்கை விடுத்த மனோ கணேசன்
08 Jul,2022
கொழும்பில் 9 ஆம் திகதி சனிகிழமை ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்கட்சிகள், காலிமுக போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்துக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,
9 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக பங்கு பெறும்.
இதன்படி மலையக தோட்டங்களில் அன்றைய தினம் பணிகளில் ஈடுபடாமல், அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படி மலையக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட வதிவாளர்களை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம்.
அதேபோல கொழும்பு உட்பட நகரங்களில் வர்த்தக நிலையங்களையும், அலுவலகங்களையும் மூடி, முழுமையாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படியும், தமது வேலைத்தள பணியாளர்களையும், அரசு எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துக்கொள்ள இடமளிக்கும்படியும் அனைத்து தரப்பினரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம் என கூறினார்.