யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்
05 Jul,2022
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் தஞ்சம் அடைகின்றமை குறிப்பிடதக்கது.
குறித்த அகதிகளிடம் ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.
மார்ச் மாதம் 22 ம் திகதி முதல் இன்று வரை பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 103 பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.