தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ராஜபக்சக்கள் களவாடி சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் வைத்திருந்த தங்கங்கள் மற்றும் அவர்களுடைய சொத்துக்களை ராஜபக்ச குடும்பம் திருடி சென்று தமக்கான சொத்துக்களாக சேகரித்து கொண்டாதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பல கப்புடாஸ் கூட்டங்கள்
விடுதலை புலிகளின் சொத்துக்களை களவாடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை பகிரங்கப்படுத்திய மேர்வின் சில்வா
மேலும் நாடு இவ்வளவு மோசமாக உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க எதற்காக இந்த பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டார் என்பது தெளிவாக புரியவில்லை.
நாட்டில் ஒரு கப்புடாஸ் மாத்திரம் இருந்த நிலையில், தற்போது பல கப்புடாஸ் கூட்டங்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மோதலின் பிரதானி கோட்டாபய
விடுதலை புலிகளின் சொத்துக்களை களவாடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை பகிரங்கப்படுத்திய மேர்வின் சில்வா
காலிமுகத்திடலில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற மோதலின் பிரதானியாக செயற்பட்டவர் கோட்டாபய ராஜபக்ச.
கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக எவ்வளவு எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை எனவும் சுட்டி காட்டினர்.
கழுத்தை பிடித்து வீச வேண்டும் - மேர்வின் ஆவேசம்
எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, அரச தலைவர் மாளிகையின் கதவுகளை உடைத்து, அரச தலைவரின் கழுத்தைப் பிடித்து அவரை வெளியே வீச வேண்டும் என்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ராஜபக்சாக்கள் ஸ்ரீ பாதத்தில் மணியை அகற்றி விற்று, பன்னிரு மகாபஹனை விற்று, பெரிய பகோடாக்களின் பொக்கிஷங்களை எடுத்து, அதமஸ்தானத்தை வணங்கி, ஏலார பயன்படுத்திய தங்க வண்டியை திருடி, விடுதலைப்புலிகளின் தலைவர் மறைத்து வைத்திருந்த தங்கத்தையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.