யாழில் தாய் மரணம் - கைதி 26 வருடங்களின் ஒரு மணி நேர இடைவெளியில் வந்த மகன்
20 Jun,2022
கடந்த 26 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி விக்னேஷ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள அழைத்துவரப்பட்ட இவர் இன்று தாயின் இறுதிக்கிரிகைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில் வசித்து வந்த குறித்த அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் – வாகீஸ்வரி கடந்த புதன் கிழமை காலமானார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தமிழ் அரசியல் கைதியாக கடந்த 26 ஆண்டுகளாக விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தின் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைக்காக ஒரு மணி நேர இடைவெளியில் வந்த இவர், இன்று தாயின் இறுதிக்கிரகைக்காக 26 வருடங்களின் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.