இந்தியா செல்ல காசை கறந்து விட்டு பின்னர் சிங்கள ராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் முகவர்கள் ! கவனம் மக்களே !
18 Jun,2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக பல தமிழர்கள் தற்போது இந்தியா நோக்கிப் படை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் அவர்களை ராமேஸ்வரத்தில் கொண்டு போய் விட பெரும் தொகைப் பணத்தை கறந்து விட்டு, புறப்படும் நேரத்தையும் இடத்தையும் சிங்கள ராணுவத்திற்கு அறிவித்து விடுகிறார்கள் அதே முகவர்கள். இப்படி பல சம்பவங்கள் நடந்து விட்டது. எனவே தமிழர்களே ஜாக்கிரதை. !
நாட்டைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறும் இடப்பெயர்வாளர்கள் பற்றிய தகவல்களைக் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு வழங்குகின்றனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கடல்மார்க்கமாக நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகின்றன.இந்தநிலையில் வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துவிட்டு படகுக்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குகின்றனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.