படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம்!
01 Jun,2022
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் நடைபெற்றது.
மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் மற்றும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் பிரதி முதல்வர் என பலரும் கலந்துகொண்டனர்.
2004 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.