பிரித்தானியாவில் புதிய விசாத்திட்டம் - இலங்கையர்களுக்கு ஏமாற்றம்
31 May,2022
பிரித்தானியாவுக்குள் வேலைவாய்பை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு விசா எனப்படும் புதிய நுழைவிசைவு திட்டம் நேற்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் வெறும் 715 பவுண்ஸ் கட்டணத்துடன் முதல் மூன்று வருடங்களுக்குரிய வேலைவாய்ப்பு விசா வழங்கப்படும். பின்னர் அது நீண்ட கால வேலைவாய்ப்பு அனுமதியாக மாற்றப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் தேவைப்படும் ஆளணியை ஈடுசெய்யும் வகையில், பிரித்தானியாவுக்குள் வேலைவாய்பை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு புதிய நுழைவிசைவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானிய பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்கு திரும்பாமல் இரண்டு ஆண்டுகள் வரை தங்கி பணிபுரிவதை அனுமதிக்கும் வகையிலான மாற்றங்களும் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கபட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் அவர்கள் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், புதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அனுமதிக்கப்படும் பட்டதாரிகள் தங்கள் குடும்பங்களையும் பிரித்தானியாவுக்குள் அழைத்து வர முடியும்.
அத்துடன் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது பிரித்தானியாவில் வேலைவாய்பை பெற்றமைக்குரிய சான்றுகள் தேவையில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வாய்பை பெறுவதற்கு தகுதியான பல்கலைக்கழகங்களென பிரித்தானியா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட முதற்கட்ட பட்டியலில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள எவையும் உள்ளடக்கப்படவில்லை.
மாறாக 20 அமெரிக்க பல்கலைக்கழகளும் கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஒஸ்ரேலியா, ஹொங்கொங், சீனா, சிங்கப்பூர், பிரான்ஸ், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன.