ஓடும் ரயிலில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்!
27 May,2022
லண்டனில் சுரங்க இரயில் முன்னர் குதித்த இலங்கை தமிழர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
Isleworth-ஐ சேர்ந்த Shivahar Sirikananathan (41) என்பவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி Turnham Green சுரங்க இரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த இரயில் முன்னர் குதித்தார், இதை பார்த்த அதிர்ச்சியடைந்த இரயில் ஓட்டுனர் இரயிலை நிறுத்த முயற்சித்தும் அது முடியாமல் போனது.
இந்த சம்பவத்தில் Shivahar உயிரிழந்தார். இது குறித்து பேசிய இரயில் ஓட்டுனர், பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் வேகமாக வந்து அவர் குதித்தார். என்னால் சரியான நேரத்தில் பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
Shivahar தண்டவாளத்தில் குதிக்கும் நேரத்தை பார்த்து கொண்டிருந்தார், அவர் வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டார் என நம்புவதாக தெரிவிக்கிறார். Shivahar மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்த நிலையில் பிரேதப் பரிசோதனையில், தசை எலும்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது தெரியவந்தது.
நச்சுயியல் அறிக்கையில், பதட்டத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படும் Pregabalin மருந்து அவர் உடலில் இருந்ததற்கான அடையாளம் தென்பட்டது. பிரிட்டிஷ் மருத்துவ இதழ் 2019ல் நடத்திய ஆய்வின்படி இந்த மருந்தானது தற்கொலை எண்ணத்துடன் இணைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Coroner Gemma Brannigan வெளியிட்ட முடிவில், Shivahar பிளாட்பார்மில் இருந்து ரயிலுக்குள் இறங்க உறுதியான முயற்சியை மேற்கொண்டது ஓட்டுனரின் சாட்சியின் மூலம் தெரிகிறது. அதே நேரம் அவரது மனநிலையை தீர்மானிக்க முடியவில்லை.
Shivahar மரணம் ஒரு தற்கொலை என்றே நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். Shivahar குடும்பத்தார் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், அவர் நல்ல குணமுள்ள மனிதர். அவரின் மரணம் பெற்றோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திருமணமாகாத Shivahar கிங்ஸ்டன் கவுன்சிலில் கணக்கியல் மற்றும் பிற தகவல் தொழில்நுட்பப் பணிகளில் பணியாற்றினார்.
அவர் உள்ளூர் அணிக்காகம்கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். நாங்கள் அவருடன் வழக்கமான தொடர்பில் இருந்தோம். Shivaharக்கு பண பிரச்சனையோ அல்லது உடல்நலப்பிரச்சனையோ கிடையாது. எந்த சூழ்நிலையிலும் அவருக்கு எந்த தொந்தரவும் ஏற்பட்டதாக எங்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ளனர்.